"ரோட்ட பாத்து ஆட்டோ ஓட்ட சொன்னா எங்கள பாத்தா ஓட்டுறீங்க" ஆட்டோக்காரர்களுக்கு இளம்பெண்கள் செக்
ரோட்ட பாத்து ஆட்டோ ஓட்ட சொன்னா பின்னால உட்கார எங்கள பாத்தா ஓட்டுறீங்க" ஆட்டோக்காரர்களுக்கு இளம்பெண்கள் செக்
ஆட்டோவில் முன்பக்க கண்ணாடியை நீக்க அரசு உத்தரவிட வேண்டும் என மகாராஷ்டிரா அரசுக்கு Watchdog Foundation என்ற அரசு சார்பற்ற அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு தெரிவிக்கையில், ஆட்டோவில் உள்ள முன்பக்க கண்ணாடி வழியாக ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை ஓட்டுனர்கள் நோட்டமிடுவதால், இளம்பெண்கள் பலரும் ஆட்டோவில் பயணம் செய்யும் போது அசவுகரியமாக உணர்வதாக குற்றம்சாட்டியுள்ளது. அதோடு, ஆட்டோ ஓட்டுனர்களின் இத்தகைய செயலால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பாக வண்டியை ஓட்ட, ஆட்டோவின் பக்கவாட்டு கண்ணாடிகளே போதுமானது என்பதால் அரசு இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.