மதுரையில் விதிகளை மீறிய நம்பர் பிளேட் - ஒரேநாளில் குவித்த அபராதம்..!

Update: 2022-12-04 02:18 GMT

வாகன நம்பர் பலகைகளில் தலைவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது உள்ளிட்ட சில சட்ட திருத்தங்களை பிறப்பித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில் மதுரை மாநகரில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகன நம்பர் பிளேட்டை மாற்ற வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தினர். இந்நிலையில் ஒரேநாளில் வாகன ஓட்டிகளிடம் 7 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்