42வது பிரகதி கலந்துரையாடல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய - மாநில அரசுகள் தொடர்புடைய 17 புள்ளி 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 340 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்களான மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்ந்த 7 திட்டங்களும், ரயில்வே அமைச்சகம் சார்ந்த 2 திட்டங்களும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, மதுரை, ராஜ்கோட், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரதமர், கட்டுமானத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கண்டு காலக்கெடுவுக்குள் திட்டங்களை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.