சிறப்பு குழந்தைக்கு அனுமதி மறுப்பு.. கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
- சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மாணவர் சேர்க்கை கோரி தாய் ஒருவர், வேலூரில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை நாடியுள்ளார்.
- எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்கு பின், சிறப்பு ஆசிரியர்கள் இல்லை என கூறி, குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.
- இதை எதிர்த்து குழந்தை சார்பில் அதன் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
- இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளி, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக கண்டனம் தெரிவித்தார்.
- புனிதர்களின் கொள்கைகளை பின்பற்றாமல், அவர்களின் பெயரை மட்டும் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
- இந்த மிஷனரி பள்ளியில் குழந்தையை சேர்ப்பது என தாய் முடிவு செய்தால், அது தமக்கு திருப்தியளிக்கும் என தெரிவித்த நீதிபதி, இது சம்பந்தமாக தாயே முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.