செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம், ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை இரு கைகளால் வாசித்து பார்வையாளர்களை கவர்ந்திழுத்தார். அப்போது ஜமைக்காவில் இருந்து வந்த அந்நாட்டு சதுரங்க போட்டி கூட்டமைப்பின் துணை தலைவர் வில்கின்சன் என்பவர், மெய் மறந்து நடனமாடியபடி ரசித்தது பலரது கவனத்தை ஈர்த்தது.