சிவப்பாக மாறப்போகும் நிலா? - நவ. 8 என்ன நடக்க போகிறது?
வரும் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் எனும் அதிசயம் வானில் நிகழவுள்ளது... அன்று நிலவு சிவப்பு நிறத்தில் மாறி "ரத்த நிலவாக" காட்சியளிக்கும்... ஆனால் நிலவு சிவப்பு நிறமாக மாறுவதற்கான காரணம் என்ன என்பதை நாசா விளக்கியுள்ளது... சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வருவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது... அதன்படி, சந்திர கிரகணத்தன்று சந்திரனை அடையும் சூரிய ஒளியானது பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து செல்வதால் நிலவு சிவப்பாக மாறும்... புவியின் வளிமண்டலத்தில் எவ்வளவு தூசு மற்றும் மேகங்கள் காணப்படுகிறதோ அவ்வளவு சிவப்பாக நிலவு காட்சியளிக்கும்... இது சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.