திருவண்ணாமலை அருகே ஒரே கிராமத்தில் படிப்பை தொடராமல் இடை நின்ற 51 மாணவர்களை கலெக்டர் அழைத்து சென்று பள்ளியில் சேர்த்தார். அய்யம்பாளையம் புதூர் பகுதியில் குடுகுடுப்பை குழந்தைகள் பலர் பள்ளிக்குச் சென்று படித்து வந்த நிலையில், இந்த கல்வி ஆண்டு அவர்கள் பள்ளிப்படிப்பை தொடராமல் இடை நின்று உள்ளனர்.
தகவலறிந்து சென்ற மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், 51 மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் அய்யம்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அழைத்துச் சென்று சேர்த்து விட்டார்.