காதல் மனைவி கழுத்தை நெரித்துக் கொலை… திருமணமாகி 2 வாரங்களில் கணவர் வெறிச்செயல்…
கல்யாணமான இரண்டே வாரத்துல புதுபெண் தற்கொலை செஞ்சிகிட்டதா அவரோட கணவன் போலீஸ்ல வாக்குமூலம் கொடுத்திருக்காரு... காவல்துறையின் விசாரணையில தற்கொலை நாடகம் அம்பலமானது எப்படி?
காதலிக்கும் பலருக்கும் தன் காதலன் அல்லது காதலியை கரம்பிடித்து எப்படியாவது வாழ்க்கை துணையாக்கிகொள்ள வேண்டும் என்பதுதான் முதல் ஆசையாக இருக்கும்…
இங்கும் ஒரு இளம்பெண் பல எதிர்ப்புகளை மீறி தன்னுடைய காதலனை வெற்றிகரமாக திருமணம் செய்துள்ளார். ஆனால், கழுத்தில் ஏறிய மஞ்சள் கயிற்றின் ஈரம் காய்வதற்குள் காதலி இறந்து போயிருக்கிறார்.
புதுமண தம்பதியிடையே என்ன நடந்தது? -ஒருவருட காதல் இருபது நாட்களில் கசந்தது எப்படி?
காதலன் கொலைகாரணாக மாறிய பின்னணியை தெரிந்துகொள்ள விசாரணையை தொடங்கினோம்…
கோவை குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். 20 வயதாகிறது. இவர்கள் பேரூர் பகுதியிலுள்ள தமிழ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.com.C.A படித்து வந்துள்ளார்.
எல்லா இளைஞர்களை போலவும் சஞ்சய்யின் மனமும் காதலை தேடி அலைப்பாய்ந்திருக்கிறது. அப்போது தன்னுடன் படித்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரமணி என்ற பெண் மீது சஞ்சய்க்கு காதல் மலர்ந்திருக்கிறது.
இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்திருக்கிறார்கள். ரமணி வீட்டில் இந்த காதல் விவகாரம் கசிய… காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் அவருக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்…
இதனால் கடந்த 6ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய ரமணி வேளாங்கண்ணியில் வைத்து சஞ்சயை திருமணம் செய்துள்ளார்.காதலன் குடும்பத்தில் இவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் இருவரும் சஞ்சய் வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார்கள்.
எல்லாம் சுமூகமாக நடந்து முடிந்து புதுவாழ்கை தொடங்கிய போது தான் ரமணி திடீரென்று சானி பவுடர் கரைத்துகுடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.மயக்கமடைந்த ரமணியை மீட்ட சஞ்சயும் அவரது பெற்றோரும் பூலுவம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு சேர்த்திருக்கிறார்கள்.
ரமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், ரமணியின் பெற்றோருக்கு மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
மகளின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை கண்டுபிடிக்க ரமணியின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.அப்போது தான் அந்த பகீரங்க உண்மை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.ஆம், ரமணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
உடனே காவல் நிலையத்திற்கு தகவல்கொடுக்கப்பட்டிருக்கிறது.சஞ்சயும் அவரது பெற்றோரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.அதன் தொடர்சியாக சஞ்சய் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்… கொலைக்கான காரணம் கள்ளக்காதல்!
சஞ்சய் ரமணியை காதலிக்கும்போதே அதே கல்லூரியில் படிக்கும் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்த தொடர்பு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்திருக்கிறது. மனைவிக்கு தெரியாமல் அந்த பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் கடலைபோட்டு வந்திருக்கிறார் சஞ்சய். கணவரின் நடவடிக்கைகளை நோட்டமிட்டுவந்த ரமணி கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கண்டித்திருக்கிறார். ஆனால், சஞ்சய் கேட்பதாக இல்லை.
சம்பவத்தன்று இந்த பிரச்சனை கணவன் மனைவியே கைக்கலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆத்திரம் தலைக்கேற துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலைச் செய்திருக்கிறார் சஞ்சய். பின்பு கொலையை மூடிமறைக்க ரமணி சானிபவுடரை குடித்து தற்கொலை செய்துகொண்டதாக அக்கம்பக்கத்தில் கூறி நாடகமாடியிருக்கிறார்.
ஆனால், உடற்கூறு ஆய்வு அறிக்கை சஞ்சயின் முகத்திரையை கிழித்தெரிந்திருக்கிறது.
உண்மை ஒரு நாளும் உறங்காது என்று சொல்லுவார்கள். சஞ்சையின் சம்பவம் அது உண்மை தான் என்று நிரூபித்திருக்கிறது.