இணையத்தில் தீயாய் பரவும் "லவ் டுடே" இயக்குனர் பிரதீபின் புதிய பதிவு | Lovetoday | Pradeep Ranganathan
தனது பெயரில் போலி பதிவுகள் இணையத்தில் பகிரப்படுவதாக "லவ் டுடே" இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், தனது பெயரில் பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டதாகவும், ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால், முகநூல் கணக்கு முடக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பதிவுகளை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது தனக்கு கோபம் இல்லை என்றும், மாறாக மக்கள் தன்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்