சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் மூலம் வழக்கு பதிவு செய்வதை கண்டித்தும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதனிடையே, லாரி உரிமையாளர்கள் சார்பாக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை, போலீசார் அகற்றினர்.