லாரியை மடக்கி பிடித்த SI-ஐ.. சரமாரியாக தாக்கிய டிரைவர், கிளீனர்.. நெல்லையில் பரபரப்பு

Update: 2022-11-30 09:00 GMT

நெல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை, லாரியில் மணல் கடத்தி சென்ற இருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் பழுவூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பார்த்தீபன்.

இவர் சக காவலர்களுடன் விஸ்வநாதபுரம் கூடங்குளம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, அதிவேகமாக நிற்காமல் சென்ற லாரியை போலீசார் விரட்டி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், லாரியை மடக்கி பிடித்து விசாரணை செய்யும் போது சட்ட விரோதமாக லாரியில் மணல் கடத்தி செல்வது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, லாரியில் இருந்த சங்கர் மற்றும் மணிகண்டனிடம் பார்த்தீபன் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவரும் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதால் பரபரப்பானது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்து லாரியினை பறிமுதல் செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்