மது விற்பனை நேரம் மாற்றமா?

மது விற்பனை குறித்து தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசுக்கு வந்த பரிந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-11-29 02:26 GMT

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மது விற்பனை குறித்து மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழகத்தில் குறைவான நேரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன என கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், விற்பனையில் தமிழகமே பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என கூறப்பட்டது. அரசுத்தரப்பில், மதுவின் அளவு குறைவாகவும், விலை அதிகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

அரசுத் தரப்பில், 21 வயதிற்கு கீழானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.அதற்கு நீதிபதிகள், மாணவர்களுக்கு மது விற்பனை 100 சதவிகிதம் செய்யப்படுவதில்லையா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், அரசு இந்த விசயத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பதை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும்.அரசுக்கு வந்த பரிந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்