தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சிறுத்தைப்புலி தாக்கி 3 ஆடுகள் பலியாகி உள்ளது. பாண்டி என்பவர் 6 வெள்ளாடுகள் மற்றும் 4 மாடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் கிராமத்திற்குள் வந்த ஒரு சிறுத்தைப்புலி 3 ஆடுகளை கொன்று சாப்பிட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது. அந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வந்ததாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வேட்டையாடிவிட்டதாகவும் பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் கூறினர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகளும் மற்றும் போலீசாரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.