"மைக்கை விடு நா மணிப்பூர் பத்தி பேசணும்" - திமுக ஆர்ப்பாட்ட மேடையில் மைக்கிற்கு போர்
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் மழை வருவதைப் போல் இருந்ததால் கண்டன முழக்கங்களை எழுப்புமாறு கூறியுள்ளார். அப்போது தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி தான் பேச வேண்டும் என்று கூறி மாவட்ட செயலாளரிடம் இருந்து மைக்கை இழுத்ததாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டு தமிழ்ச் செல்வியை கீழே இறங்குமாறு வற்புறுத்தினர். அப்போது திமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தமிழ்ச் செல்வியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில் தமிழ்ச் செல்விக்கும் கவுன்சிலர் கனிமொழிக்கும் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.