சட்டைநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்..உயர்நீதிமன்ற நீதிபதி உள்பட பலர் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டைநாதர் சாமி கோயிலில் பரிவார கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் எட்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆபத்து காத்த விநாயகர், சம்கார வேலவர், அஷ்ட பைரவர், தேவேந்திர லிங்கம் உள்ளிட்ட பரிவார கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமை ஆதினம் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தை, உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்பட திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.