20 ஆண்டுகால வழக்கில் தீர்ப்பு - முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் விடுதலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பட்டாசு வெடித்து தஸ்தகீர் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உட்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ செங்குட்டுவன் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.