"கல்குவாரி புதிய நீர் தேக்கமாக மாற்றப்படும்" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

Update: 2022-11-06 09:06 GMT

கோடை காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லையென்றால் சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். இந்த நிலையில் இதனை பெரிய நீர் தேக்கமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில் இன்று நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, எம்எல்ஏ செல்வ பெருந்தகை ஆகியோர் சிக்கராயபுரம் கல்குவாரி யை ஆய்வு செய்தனர். அப்போது செம்பரம்பாக்கம் ஈரல் இருந்து உமர் நீரை எந்த வழியாக கொண்டு வருவது இந்த பகுதியை மிகப்பெரிய நீர்த்தேக்கமாக மாற்றுவது குறித்தும் இங்கிருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வது குறித்தும் ஆலோசனை செய்தனர் இதையடுத்து பேட்டியில் கூறியதாவது :

பொதுப்பணி துறையில் செம்பரம்பாக்கத்தில் உள்ள கூடுதல் தண்ணீரை இங்கு கொண்டு வந்து தேக்கி வைத்து குடிநீராக மாற்றி அனுப்பி வைத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தது போல் மழைநீரை தேக்கி வைக்கும் பெரிய ஏரிகளை உண்டாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இங்கு 130 ஏக்கர் அரசு நிலம் 50 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது. அவர்களின் அனுமதி பெற்று உரிய தொகையை செலுத்தி 250 ஏக்கர் நீர்த்தேக்கமாக மாற்ற பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கான நிதியை ஒதுக்கி பெரிய நீர்த்தேக்கம் உண்டாக்குவதற்காக பார்வையிட்டுள்ளோம் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதி பெற்று தருவோம், இங்கிருந்து

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் கொடுக்கும் பணி செய்ய உள்ளோம் பணி தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்