"அடிக்கடி வீட்டுக்கு வரும் ராஜ நாகம் - பீதியில் உறைந்த குடும்பம்"

Update: 2022-10-20 09:19 GMT

கேரள மாநிலம் பாலக்காட்டில் 12 அடி நீள ராஜநாகம் ஒன்று மரத்தில் ஏறி ஒய்யாரமாக ஓய்வெடுத்த சம்பவம் மக்களை பீதியடையைச் செய்துள்ளது... போத்துண்டு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் ரப்பர் தோட்டத்தில் உள்ள மரத்தில் 12 அடி நீளமுடைய ராஜ நாகம் களைப்பில் ஹாயாக படுத்துறங்கி ஓய்வெடுத்தது... உடனடியாக ராமச்சந்திரன் வனத்துறைக்குத் தகவல் அளித்த நிலையில், ஊழியர்கள் விரைந்து வந்து ராஜநாகத்தைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனர். ராஜநாகம் தொடர்ந்து 3வது முறையாக ராமச்சந்திரன் வீட்டருகே வந்துள்ளது அவரது குடும்பத்தை அச்சம் அடையச் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்