பள்ளியை விட்டு சென்று... மீண்டும் வந்த ஆசிரியை... கண்டதும் பாசத்தில் கதறி அழுத குழந்தைகள்

Update: 2022-11-16 04:43 GMT

கேரளாவில் பள்ளியில் இருந்து விடைபெற்ற ஆசிரியை ஒருவர், பள்ளி விழாவுக்காக வந்தபோது, அவரை கண்ட மாணவிகள் அன்பின் மிகுதியால் கண்ணீர் விட்டு அழுதனர். காசர்கோடு அருகே பதிரா பகுதியில் உள்ள பள்ளியில், ஆசிரியை அம்சீரா பணியாற்றி வந்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் பணியில் இருந்து விடை பெற்றார். இந்நிலையில், குழந்தைகள் தினத்தன்று மாணவர்களை சந்திக்க பள்ளிக்கு வந்த நிலையில், அவரை பார்த்த மாணவிகள், அன்பின் மிகுதியால் கண்ணீர் விட்டு அழுதனர். இதை கண்ட ஆசிரியையும் அழுத நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்