முதல்வர் பதவிக்கு சிக்கல்..! தப்புமா பினராயி விஜயன் ஆட்சி..? இன்று வெளியாகிறது தலையெழுத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு
- கேரளாவில் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக பினராயி வியன மற்றும் 18 அமைச்சர்கள் மீது புகார் எழுந்தது.
- இது தொடர்பாக லோக் ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கின் விசாரணை முடிந்ததை அடுத்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
- சிவில் நடைமுறை சட்டப்படி விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு கூறப்பட வேண்டும்.
- ஆனால் இந்த வழக்கு விசாரணை முடிந்து ஓராண்டு ஆன நிலையில், தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இந்நிலையில் ஆர்.எஸ்.சசிகுமார் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யதை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
- இது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.