தமிழக பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட கேரள அதிகாரிகள் - ஆதிதிராவிட நல அலுவலர் விசாரணை
தமிழக பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட கேரள அதிகாரிகள் - தென்காசி மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் விசாரணை
தென்காசி அருகே மலைவாழ் பெண்ணிடம் அத்துமீறிய கேரளா வனத்துறையினரை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்களிடம், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் நேரில் விசாரணை செய்தார்.
வாசுதேவநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடி வாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள், மலையில் உள்ள மகசூல் பொருட்களை எடுத்து விற்பனை செய்து, வாழ்ந்து வருகின்றனர். சனிக்கிழமையன்று மலைக்கு சென்று தேன், சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்துள்ளனர். அப்போது, இரண்டு பெண்களை வழி மறித்த கேரளா வனத்துறையினர், அவர்களின் சேலையை இழுத்து தகாத முறையில் நடக்க முயன்றுள்ளனர். அப்போது
அவர்கள் கூச்சலிட்டதால் வனத்துறையினர் ஓட்டம் பிடித்தனர். கேரளா வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மலை அடிவாரத்தில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நூற்றுக்கு மேற்பட்டோர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த செய்திகள் தந்தி டிவியில் ஒளிப்பரப்பான நிலையில், வனத்துறை, வருவாய்த் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மலைவாழ் மக்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டார். ,
மாவட்ட குற்றவியல் டிஎஸ்பி வனச்சரக அதிகாரிகளும் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.