திடீரென்று மிரண்டு சாலையில் ஓடிய யானை... அச்சத்தில் அலறியடித்து ஓடிய மக்கள்
கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலையில் ஓட்டம் பிடித்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
மன்னார்க்காடு பகுதியிலுள்ள மரம் அறுவை நிலையத்திற்கு, மரங்களை ஏற்றி இறக்கும் பணிக்காக யானை ஓன்று கொண்டுவரப்பட்டது.
பணியின்போது திடீரென மிரண்ட யானை, சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தலைதெறிக்க ஓடியது.
சாலையில் யானை ஓடி வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
பின்னர், பின்தொடர்ந்து சென்ற யானை பாகன், யானையை ஆசுவாசப்படுத்தி மரத்தில் கட்டி வைத்தார்.
இதனால், அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.