ஆந்திராவின் பெண்ணாறு-தமிழ்நாட்டின் கல்லணை இணைப்பு மற்றும் காவேரி-வைகை மற்றும் குண்டாறு இணைப்புக்கு விரிவான திட்ட அறிக்கை பூர்த்தி அடைந்துள்ளது.
மக்களவையில் இது குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த, ஜல் சக்தித்துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றோடு தொடர்புடைய காவேரி (கட்டளை)-வைகை-குண்டாறு இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கைப் பூர்த்தி அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
நதிகள் இணைப்புத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தண்ணீர் பகிர்வு, தேவைப்படும் சட்டபூர்வமான ஒப்புதல்கள் கிடைத்தபின் அமலாக்க கட்டம் தொடங்கும் என்று அமைச்சர் கூறினார்.