கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டில் மீண்டும் சோதனை -சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீட்டை சுற்றிவளைப்பு
கரூரில் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர், 3வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராயனூர் தீரன் நகர் பகுதியில் அமைந்துள்ள துணை மேயர் வீடு, சோடா கம்பெனி உரிமையாளர், சன் நகர் பகுதி, வடக்கு காந்தி கிராமம் பகுதியில் பிரேம்குமார்-ஷோபனா வீடு, வையாபுரி நகர், திருக்காம்புலியூர், பவுத்திரம் என, 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.