கார்த்திகை தீபம் 2-ஆம் நாள்.. பால் குடம், காவடி எடுத்து சென்ற பக்தர்கள் | Karthika Deepam

Update: 2022-11-28 09:52 GMT

கார்த்திகை தீப திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, அண்ணாமலையார் கோயிலில் தங்க சூரியபிரபை வாங்கனங்களில் விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியுலா நடைபெற்றது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான இன்று, விநாயகர் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

கும்பகோணம் அருகே துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நெசவாளர்கள், குடும்பத்தோடு சுவாமிமலை முருகன் கோவிலுக்கு காவடி, பால் குடம் எடுத்து நடைபயணம் மேற்கொண்டனர். கார்த்திகை மாத இரண்டாவது திங்கட்கிழமை அன்று, பக்தர்கள் ஆண்டுதோறும் விரதம் இருந்து காவடி எடுப்பது வழக்கம். இந்த ஆண்டும் பால் குடங்கள், காவடிகள் எடுத்த பக்தர்கள் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு நடைபயணமாக சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்