நெஞ்சை உலுக்கிய பட்டாசு ஆலை வெடி விபத்து... பரிதாபமாக உயிரிழந்த ஒன்பது பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
காஞ்சிபுரம் அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்களும், உடற்கூராய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. குருவிமலை ஊராட்சி வளத் தோட்டம் பகுதியில், தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 18 பேர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்து, உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து, அனைத்து உடல்கள் அமரர் ஊர்திகளில் ஏற்றி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.