முக்கிய கோப்புகள் மாயம்- ஊராட்சி செயலாளர் தற்கொலை? - உயிரிழக்கும் முன் பேசிய அதிர்ச்சி ஆடியோ - நடந்தது என்ன?
- கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தற்கொலைக்கு முன்பு ஊராட்சி செயலாளர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல்.
- இவர் சிறுவங்கூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், ஏரிக்கரை அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- விசாரணையில், ஜெயவேல் பணி சம்மந்தப்பட்ட முக்கியமான கோப்புகளை அலுவலகத்தின் அறையில் வைத்துவிட்டு சபரிமலை சென்றதாகவும், திரும்பி வரும் போது அறைமுழுவதும் பிளிச்சிங் பவுடர் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
- இதில், பல முக்கியமான கோப்புகள் மாயமானதால், மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட மன உளைச்சலில் ஜெயவேல் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியது.
- இந்நிலையில், தற்கொலைக்கு முன்பு ஜெயவேல் பேசிய ஆடியோ சமூல வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.