கலை கள்ளர் வெட்டுத் திருவிழா ..! - இசை மேளங்கள் முழங்க கோலாகலம்

Update: 2022-12-17 10:45 GMT

திருச்செந்தூர் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில், கள்ளர்வெட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, மேள தாளம் முழங்க தாமிரபரணி ஆற்று தீர்த்தம் கொண்டு வந்து, பூர்ணாதேவி, புஷ்கலா தேவி, கற்குவேல் அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர், கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த மணலை, பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்தும் சென்றனர்.

பிறவிமருந்தீஸ்வரா் கோயிலில் மார்கழி இசை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிறவிமருந்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. மார்கழி மாத பிறப்பையொட்டி, இந்தக் கோயிலில் திருவையாறு எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 108 தவில் - நாதஸ்வர கலைஞா்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வினை பக்தர்கள் பலர் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்