மதவழிபாட்டுத் தலத்தில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு.. ஜெருசலேமில் பரபரப்பு

Update: 2023-01-28 09:51 GMT

ஜெருசலேமில் மதவழிபாட்டுத் தளத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

2ம் உலகப் போரில் நாஜிகளால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூரும் விதமாக, சர்வதேச இனப்படுகொலை தினமான நேற்று இஸ்ரேலியர்கள் மதவழிபாட்டுத் தலத்தில் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினர்...

சரியாக இரவு 8.15 மணிக்கு மத வழிபாட்டுத் தலத்திற்கு வந்த மர்ம நபர் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்...

தொடர்ந்து அந்த மர்மநபரை இஸ்ரேல் போலீசார் சுட்டுக் கொன்றனர்...

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கிழக்கு ஜெருசலேமில் வசித்த பாலஸ்தீனியர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வமாக அது நிரூபிக்கப்படவில்லை.

இத்தாக்குதலை "பயங்கரவாதம்" என இஸ்ரேல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்