"எல்லாமே பொய், வதந்தி; உயிருள்ள வரையில்-பாஜகவுக்கு செல்லமாட்டேன்" - அஜித் பவார் திட்டவட்டம்..!

Update: 2023-04-19 02:58 GMT

மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பாஜக செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாக அம்மாநில அரசியலை பரபரப்பாக்கியது. இந்த தகவலை தேசியவாத காங்கிரஸ் மறுத்த நிலையில், அஜித் பவார் தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை நீக்கியது சந்தேகத்தை வலுப்பெற செய்தது. இந்த சூழலில், தான் பாஜகவில் இணைவதாக வெளியாகியிருக்கும் தகவலை அஜித்பவார் மறுத்துள்ளார். தன்னுடைய அரசியல் நகர்வு குறித்து போலியான தகவல்கள் பரவுகிறது எனக் கூறியிருக்கும் அஜித்பவார், தேசியவாத காங்கிரசில்தான் இருக்கிறேன், உயிருள்ள வரையில் தேசியவாத காங்கிரசிலே இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத போது, கட்சியில் சரத்பவார் ஒப்புதல் இல்லாமலே பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி துணை முதல்வராகி பின்னர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்