உலகளாவிய ஆட்குறைப்பு நடவடிக்கையில் இணைந்திருக்கும் டெல் நிறுவனம், 6 ஆயிரத்து 650 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக என தகவல் வெளியாகியிருக்கிறது.
கொரோனாவுக்கு பின்னர் தனிநபர் கணினிகளுக்கான தேவை குறைவினால் வர்த்தகம் பாதிப்பு காரணமாக டெல் இந்த நடவடிக்கையை எடுப்பதாக கூறப்படுகிறது.
இப்போதைய வர்த்தக சூழல் எதிர்கால சந்தையை நிச்சயமற்றதாக்குகிறது என டெல் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் கிளார்க் ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.