பின்லேடனையும் அல் கொய்தாவையும் அழிக்க அமெரிக்கா பிள்ளையார் சுழி போட்ட நாள்

Update: 2022-08-11 04:26 GMT

2001இல் அமெரிக்காவில் அல் கொய்தா நிகழ்த்திய இரட்டை கோபுர தாக்குதலில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, 2001 அக்டோபரில் அல் கொய்தா இயக்கத்தை அழிக்க, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது. நவம்பர் இறுதியில், ஆபாகானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தொடர்ந்து பின் வாங்கிய தாலிபன்கள், பாகிஸ்தானிற்கு இடம் பெயர்ந்தனர். ஆனால் எல்லைப் பகுதிகளில் போர் தொடர்ந்தது.

2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சர்வதேச பாதுகாப்பு உதவி படையை அனுப்ப ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 42 நாடுகள் இதில் பங்கெடுத்தன. இவற்றில் 30 நாடுகள் நேட்டோ ராணுவ கூட்டமைப்பை சேர்ந்தவை.

ஆப்கானிஸ்தான் முழுவதும் 400 ராணுவ தளங்களில் இந்தப் படையைச் சேர்ந்த1.3 லட்சம் ராணுவ வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டனர். ஆப்கன் தேசிய ராணுவத்திற்கு பயிற்சிகள் அளிப்பது, ஆயுத உதவிகள் அளிப்பது, தாலிபன்களின் தாக்குதல்களை முறியடிப்பது ஆகியவை இவர்களின் முக்கிய பணிகள்.

ஒரு கட்டத்தில் சர்வதேச பாதுகாப்பு உதவி படையின் தலைமை, ஐ.நாவிடம் இருந்து நேட்டோ ராணுவக் கூட்டமைப்பிற்கு மாற்றப்பட்டது. நேட்டோ தலைமையேற்ற பின், தாலிபன்களின் தாக்குதல்கள் வெகுவாக அதிகரித்து, இரு தரப்பிலும் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாலிபன்கள் தாக்குதல்கள் நடத்தி, பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.

2014இன் இறுதியில், ஆப்கானிஸ்தானை பாதுகாக்கும் பொறுப்பு, ஆப்கன் தேசிய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு, சர்வதேச பாதுகாப்பு உதவி படை தனத இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

ஆப்கன் போரில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய, நேட்டோ படைகள், சர்வதேச பாதுகாப்பு படையின் தலைமை பொறுப்பை ஏற்ற தினம் 2003, ஆகஸ்ட் 11.

Tags:    

மேலும் செய்திகள்