"ஒரு வாரம் தான் ஆச்சு கட்டி முடிச்சு"... தொட்டாலே பெயர்ந்து விழும் பஸ் ஸ்டாண்ட் - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்
மதுரை மாவட்டம், கீழவடக்கூர் கிராமத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் சிமெண்ட் பூச்சுகள் தொட்டாலே பெயர்ந்து விழுந்து நிலையில் உள்ளது.
5 லட்ச ரூபாய் செலவில், கடந்த 6 மாதங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழும் நிலையில் இருந்தது.
இதுகுறித்து அந்த கிராம இளைஞர்கள் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டதை அடுத்து, அதிகாரிகள் கள ஆய்வு செய்து, ஒப்பந்ததாரர் கணேசனிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, அந்த பேருந்து நிறுத்தத்தை இடித்து விட்டு, புதிய கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.