"சூடானில் உள்ள தமிழர்களை மீட்டு வருவது அரசின் பொறுப்பு" அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
சூட ானில் இருந்து, தமிழகத்தை சேர்ந்த 247 இதுவரை மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சூடானில் இருந்து மீட்டு வரப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 12 பேர், மும்பை டெல்லி வழியாக சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலாநிதி வீராசாமி எம்பி ஆகியோர் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சூடானில் உள்ள அனைத்து தமிழர்களையும் மீட்டு வருவது தமிழக அரசின் பொறுப்பு என்றார்.