சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா? - அண்ணாமலை கேள்வி

Update: 2022-09-30 02:03 GMT

சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை தடை விதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையின் விளக்கத்தின்படி, வன்முறை நடத்தும் அளவுக்கு பிஎஃப்ஐ உறுதியாக இருக்கிறார்களா? அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காவல்துறை ஒத்துக்கொள்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி உள்ளதால், தமிழகத்திலும் அனுமதி வழங்க காவல்துறைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என வலியிறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்