பொதுமக்களிடம் வசூலிக்கும் ஜிஎஸ்டி அரசுக்கு செலுத்தப்படுகிறதா? - வணிகவரித் துறை விளக்கம்
மக்களிடம் வசூலிக்கும் ஜிஎஸ்டி வரியை வணிகர்கள் சரியாக அரசுக்கு செலுத்துகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காவே சோதனை மேற்கொள்ளப்படுவதாக வணிகவரித் துறை தெரிவித்துள்ளது.பொருட்களை விற்பனை செய்யும்போது ம், சேவைகளை வழங்கும்போதும் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் ஜிஎஸ்டியை அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டும். இந்நிலையில், மக்கள் வாங்கும் பொருட்களுக்கும், வழங்கும் சேவைகளுக்கும் வணிகர்களால் பில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, சோதனைக் கொள்முல் வணிக வரித்துறை கடைப்பிடித்து வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த 2022-ஆம் ஆண்டில் மொத்தம் 3 ஆயிரத்து 148 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை கொள்முதலில், ஆயிரத்து 840 இடங்களில் பில் வழங்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், பில் வழங்குவதை கண்காணிப்பதற்கு ஜிஎஸ்டி சட்டத்தின்படியே இந்த சோதனை கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் வணிகவரித் துறை தெரிவித்துள்ளது. இதனால், நேர்மையாக வணிகம் செய்பவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.