காங்கிரசுடன் கரம் கோர்க்கிறதா மநீம? - முரசொலி நாளிதழில் வெளியான முக்கிய செய்தி

Update: 2023-04-30 10:56 GMT

நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரசுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் பயணிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கான தேதியை கமல்ஹாசன் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், முரசொலி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதன் மூலம் மக்கள் நீதி மய்யம், நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரசுடன் இணைந்து பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக வெளியான தகவலால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளதாகவும், முரசொலி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்