ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் கோலி தலைமையில் களமிறங்கிய பெங்களூரு அணி, 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது. மொகாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டூபிளஸ்ஸி 84 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும் எடுத்தனர். பின்னர் 175 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 18 புள்ளி 2 ஓவரில் 150 ரன்னுக்கு பஞ்சாப் ஆல்-அவுட் ஆன நிலையில், 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது. பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.