பங்கு சந்தையில் இருந்து வெளியேறும் முதலீடுகள்... தங்கத்திற்கு மாறும் சர்வதேச முதலீட்டாளர்கள் - உச்சமடைந்த தங்கம் விலை

Update: 2023-03-21 17:03 GMT

அமெரிக்காவில் வட்டி விதிதம் 4.75 சதவீதமாக ஒரே ஆண்டில் அதிகரித்தால், சிலிகான் வேலி வங்கி மற்றும் இதர சில வங்கிகள் திவால் நிலையை அடைந்தன.

சிலிகான் வேலி வங்கியை கையகப்படுத்தியுள்ள அமெரிக்க வங்கிகள் ஒழுங்குமுறை ஆணையம், அதன் டெப்பாசிட்கள் பிரிவை தனியாகவும், தனியார் வங்கி பிரிவை தனியாகவும் பிரித்து விற்க முயற்சி செய்து வருகிறது. சுவிஸர்லாந்தின் கிரெடிட் சூஸு வங்கி திவாலான பின், அதை யு.பி.எஸ் வங்கி 200 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது. வங்கித் துறைக்கு உலகெங்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளினால், பங்கு சந்தைகள் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளன. நேற்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 905 புள்ளிகள் சரிந்தது. பங்கு சந்தைகளில் இருந்து தங்கத்திற்கு சர்வதேச முதலீடுகள் மாறி வருவதால் தங்கம் விலை வரலாறு காணத உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று இந்தியாவின் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 44 ஆயிரத்து 640 ரூபாயக புதிய உச்சத்தை எட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்