சர்வதேச சமையல் Afgani Omlette... குட்டி பட்ஜெட்டில் பெரிய ரெசிபி...

Update: 2023-05-28 07:20 GMT

சர்வதேச சமையல் இண்ணக்கு நாம சமைக்க இருக்கும் ரெசிபி... ஆஃப்கானிஸ்த்தான் மக்களின் ஃபேவரைட் ரெசிபியாக இருக்கும் afgani omlette

நமக்குலாம் வீட்டுல ரசம், சாம்பார்னு எது வச்சாலும் கூடவே சுட சுட தொட்டுக்க ஆம்லெட் வச்சா தான்... சோறு தொண்டைல விழுக்குனு இறங்கும்... அதுமாதிரி ஆஃப்காணிஸ்த்தான் காரங்க அவங்க நாட்டு ஸ்டைல்ல உருவாக்குனது தான் இந்த afgani omlette... ஹ்ம்ம்ம் பாக்கும் போது கண்ணுக்கே விருந்து வைக்குதுனா சாப்ட்டு பாத்தா எப்டி இருக்கும்... சரி வாங்க அதையும் தான் சமைச்சு சாப்ட்டு பாத்துடுவோமே...

afgani omlette சமைக்க தேவையான பொருட்கள்... முட்டை, உருளை கிழங்கு, வெங்காயம், எண்ணெய், தக்காளி, உப்பு, மிளகு, கொத்த மல்லி பச்சை மிளகாய் அவ்வளொ தான் இனி சமைக்க ஆரம்பிச்சுடலாம்...

முதல்ல ஒரு பெரிய சைஸ் பான் பாத்திரத்துல... கால் கப் எண்னெய்ய ஊத்தி கொதிக்க விடனும்... அதுகப்புறம் உருளைகிழங்க எடுத்து பொடி பொடியா ஒரு கப் அளவுக்கு நறுக்கி... அதை அப்படியே எண்ணெய்ல போட்டு 3 நிமிசம் நல்லா வதக்கி விடனும்...

அடுத்து வெங்காயத்தை பொடிசா ஒரு அரை கப் அளவுள நறுக்கி... பாத்திரத்துல போட்டு மறுபடியும் நல்லா வதக்கி விடனும்... வதக்கி முடிச்சதும் கூடுதலான டேஸ்ட்டுக்கு பொடிசா நறுக்குன தக்காளி ஒரு கப், அரை ஸ்பூன் உப்பு மற்றும் மிளகு தூள்... இது எல்லாத்தையும் சரியான அளவுள போட்டு... உப்பு காரம் எல்லாபக்கமும் சாருற அளவுக்கு நல்லா கிளரி ஒரு 7 நிமிசத்துக்கு சிம்ல வேக வச்சுகோங்க...

சமையலின் அடுத்த கட்டமா... வெந்த காய்கறிகள பாத்திரத்துக்குள்ளயே அழகா வட்டம் பிடிச்சு... மட்டம் தட்டி வைக்கனும்...

இப்போ நம்ம ரெசிபியின் நாயகனான முட்டைய... ஒரு அஞ்சு எடுத்து உடைச்சு ஊத்திக்கனும்... முக்கியமா முட்டைய ஒடைச்சு ஊத்தும்போது... இன்னோரு முட்டை மேல படாம... மஞ்சள் கரு உடையாம ஊத்துறது நல்லது... ஏனா அப்போ தான் ரெசிபி நம்ம எதிர் பாத்த ஷேப்ல கிடைக்கும்...

முட்டைய உடைச்சு ஊத்துனதுக்கு அப்புறம்... அதுமேல லைட்டா உப்பு, மிளகு தூள தூவி விட்டு... அப்டியே கொஞ்சம் கொத்தமல்லியும், நாளு பச்சை மிளாகாயயும் கிள்ளி போட்டு... ஒரு 7 நிமிசம் மூடி போட்டு... வேக வச்சு எடுத்தா... சுட சுட... மணக்க மணக்க... afgani omlette ரெடி...

சரி... அப்புறம் என்ன வீட்டுல ரசமோ... சாம்பாரோ என்ன இருக்குனு பாத்து... afgani omlette துனையோட... இன்னைக்கு ஒரு புடி புடிக்கலாம் வாங்க

Tags:    

மேலும் செய்திகள்