டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஷ்வினை அணியில் சேர்க்காத விவகாரத்தில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விமர்சித்துள்ளார். பச்சைப்புல் ஆடுகளத்தில் ஆஃப் ஸ்பின்னர் விளையாட முடியாது என யார் சொன்னது என விமர்சித்துள்ள கங்குலி, ஆஸ்திரேலிய அணியின் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயனுக்கு, பந்து நன்றாக திரும்பி பவுன்சும் ஆனதாக தெரிவித்துள்ளார். மேலும் அஷ்வின் போன்ற மேட்ச் வின்னரை இடம் பெற செய்யாமல் இந்திய அணி தவறு செய்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.