அதிகரிக்கும் மகப்பேறு உயிரிழப்பு-விஜயபாஸ்கர்/மா.சுப்பிரமணியன்..!

Update: 2023-04-19 01:47 GMT

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஒரு லட்சத்து 90 என இருந்த மகப்பேறு இறப்பு எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து 2021 ஆம் ஆண்டு 54 ஆக குறைத்ததாக கூறினார்.தற்போது, அது 54 ஆக நீடித்து வருவது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பெருந்தொற்று காரணமாக இறப்பு விகிதம் அதிகரித்ததாகவும், தற்போது 52.3 ஆக உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர், கொரோனா பெருந்தொற்று தான் காரணம் என்றால், கேரளாவில் இறப்பு விகிதம் 19 ஆகவும், ஆந்திராவில் 45 ஆகவும், தெலங்கானாவில் 43 ஆகவும் இருப்பது எப்படி பெருந்தொற்று எல்லா மாநிலங்களிலும் தானே இருந்தது என மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், அதிமுக ஆட்சியில் ஏதோ 16 ஆக இருந்ததை போலவும், தற்போது 52 ஆக இருப்பதை போல விஜயபாஸ்கர் பேசுவதாக கூறினார்.

மீண்டும் பேசிய விஜயபாஸ்கர், அதிமுக ஆட்சி காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 4000 பேர் வீதம் மொத்தம் 33 ஆயிரத்து 223 பேர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்தப்பட்டதாகவும்,  திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் 2 ஆயிரம் பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.அதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரத்து 308 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதில் 1021 மருத்துவ இடங்களுக்கு 25 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர்களுக்கான ஆன்லைன் தேர்வு வரும் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்