அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் அச்சம்

அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் அச்சம்

Update: 2022-06-08 03:35 GMT

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி பயிலும் இருவருக்கு, சில தினங்களுக்கு முன்பு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைடுத்து சுகாதாரத் துறையினர், தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் 235 பேருக்கும் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 21 மாணவிகள், 8 மாணவர்கள் என 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தொற்று எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்