தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை கொட்டித்தீர்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, சூளகிரி, பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. கடந்த 2 வாரங்களாக அடிக்கடி கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஆங்காங்கே மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செட்டித்தாங்கள், கீழ்த்தாழனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.