திருச்சி அருகே மன உளைச்சலில் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Update: 2022-09-16 09:57 GMT

திருச்சி அருகே மன உளைச்சலில் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துறையூர் அருகே உள்ள நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியரான மோகன்தாஸ் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆங்கில ஆசிரியை லில்லி மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லில்லி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை என கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்