கேரளாவில் இன்னும் 48 மணி நேரத்தில்... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் காரணமாக கேரளாவில் பருவமழை தொடங்குவது கால தாமதமான நிலையில் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கிடையே, கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.