"வாழை தோட்டமா இல்லை கஞ்சா தோட்டமா?"தப்பியோடிய கணவன்..சிக்கிய மனைவி | Vellore | CannabisPlantation

வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் வாழை தோட்டத்தில் கஞ்சா வளர்த்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-12 05:37 GMT

வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் வாழை தோட்டத்தில் கஞ்சா வளர்த்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கோவிந்தன் என்பவரது விளைநிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த‌து. இதையடுத்து அங்கு ஆய்வு செய்த‌ போது, கஞ்சா வளர்ப்பது தெரிய வந்த‌து. அதே நேரத்தில், கோவிந்தன் தப்பியோடி தலைமறைவான நிலையில், அவரது மனைவி ராதாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார், தலைமறைவான கோவிந்தனை தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்