"பிரதமர் கோபப்பட்டிருந்தால் மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்" -அதிர்ந்த நாடாளுமன்றம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளில் மக்களவை தொடங்கிய உடனேயே, மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நண்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, பதாகைகளை ஏந்தியபடி சபாநாயகர் இருக்கையை சூழ்ந்தவாறு எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் வரும் திங்கட்கிழமை காலை வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.