கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான K.G.F 2 உலக அளவில் வசூலை வாரி குவித்தது. இதனால் யஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் மீது எல்லோரது கவனமும் உள்ளது. 'யஷ் 19' என்றழைக்கப்படும் படத்தை இவர் தான் இயக்க போகிறார் என பல இயக்குநர்களின் பெயர்கள் வந்த வண்ணம் உள்ளன. இது பற்றி அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த யஷ் பேசுகையில், ரசிகர்கள் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கை மிகப்பெரியது என்றும், அதனை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளதாகவும் கூறினார். ஒரு நாள் கூட வீணடிக்காமல் அடுத்த படத்துக்காக உழைத்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், விரைவில் யஷ் 19 அறிவிப்பு வெளியாகும் என்றார். KGF வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டுக்கு செல்கிறீர்களாமே என்ற கேள்விக்கு, நான் எங்கேயும் போகமாட்டேன் என அதிரடியாக பதலளித்துள்ளார் நடிகர் யஷ்.