காதலியிடம் போனில் பேசிய நண்பன்.. இதயத்தை கிழித்து, மர்ம உறுப்பை அறுத்து காதலிக்கே Whatsapp-ல் அனுப்பிய காதலன்

Update: 2023-02-27 07:02 GMT
  • ஹைதராபாத்தில் உள்ள அப்துல்லாபூர்மெட் என்ற பகுதியில், இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
  • தெலங்கானா மாநிலம் ஹைதராபத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் நவீன், கடந்த 17ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
  • எங்கும் தேடியும் நவீன் கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
  • இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நவீன் வீட்டில் இருந்தபோது, அவருக்கு கடைசியாக போன் செய்த நெருங்கிய நண்பனான ஹரி கிருஷ்ணா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
  • பின்னர், அவரது வீட்டிற்கு விரைந்த போலீசார், அங்கு ஹரிகிருஷ்ணா இல்லாததும், நீண்ட நாட்களாக வீட்டுக்கு வராமல் இருப்பதும் , போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
  • அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஹரி கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் அளித்த தகவல்கள், போலீசாரையே அதிர்ச்சியில் உறைய வைத்தன.
  • ஆம்... நவீனை நான் தான் கொலை செய்தேன், தலையை துண்டித்தேன், இதயத்தை கிழித்தேன், மர்ம உறுப்பை அகற்றினேன், இவற்றையெல்லாம் எனது காதலியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தேன் என ஹரி கிருஷ்ணாவின் இந்த வாக்குமூலம் போலீசாரையே கிறுகிறுத்துப் போகச் செய்தது.
  • கொலை செய்த பின் நவீனின் உடலை அப்துல்லாபூர்மெட் பகுதியில் உள்ள மலைக்குன்றில் வீசியதாகக் கூற, உடனடியாக அந்தப் பகுதிக்கு ஹரி கிருஷ்ணாவுடன் போலீசார் விரைந்தனர். அங்கு சிதைந்த நிலையில் கிடந்த உடலை மீட்ட போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • பின்னர் ஹரி கிருஷ்ணாவிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
  • அதில், பெண் ஒருவரை காதலித்து வந்த நவீன், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்துள்ளார். அதன் பிறகு நவீனின் நண்பனான ஹரி கிருஷ்ணாவுக்கும், அந்தப் பெண்ணிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
  • இதனை அறிந்த நவீன், ஹரி கிருஷ்ணாவிற்கு தெரியாமல், முன்னாள் காதலியுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி செல்போனில் மறைமுகமாக பேசி வந்துள்ளார்.
  • இந்த விவகாரம் தெரியவரவே, துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத ஹரிகிருஷ்ணா, நவீனை கொலை செய்து தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
  • அதன்படி, நவீனை தனியான இடத்திற்கு வரவழைத்து, இந்த கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளது போலீசாரின் விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
  • காதலியிடம் தவறான உறவில் இருந்ததாகக் கருதி, நண்பனைக் கொடூரமாக கொலை செய்து, உடல் பாகங்களை அறுத்து எடுத்து, அதனை தனது காதலியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்த சம்பவம், தெலங்கானா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்